பகல்காமில் சுற்றுலாப் பயணிகளைப் சுட்டுக்கொன்றதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு..!

பகல்காமில் சுற்றுலாப் பயணிகளைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதைக் கண்டித்துக் காஷ்மீரில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.
ஸ்ரீநகரில் முழு அடைப்பையொட்டி அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. லால்சவுக் மணிக்கூண்டு அருகே சாலையில் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

புல்வாமாவில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
பகல்காம் படுகொலையைக் கண்டித்துப் பூஞ்ச் நகரிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர், உத்தம்பூர், தோடா ஆகிய நகரங்களின் முதன்மையான இடங்களில் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கத்ராவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் ஓரளவே இருந்தது.

பகல்காம் படுகொலையைக் கண்டித்து ஹண்ட்வாராவில் சந்தையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.பகல்காமில் படுகொலை நிகழ்ந்த இடத்தில் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
படுகொலையைக் கண்டித்து ஸ்ரீநகரில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *