இந்திக்கு இங்கே இடமில்லை : முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!

Advertisements

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை என்றார்.

மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது என்றும், இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மேலும், மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது எனவும், நம் தமிழுணர்வு சாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *