Sasikala Pushpa: சசிகலா புஷ்பாவுக்கு கடும் எதிர்ப்பு!

Advertisements

சென்னை: பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா புஷ்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி நிர்வாகிகள் தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். சசிகலா புஷ்பா போன்ற குப்பைகளைத் தலையில் தூக்கி கொண்டாடுவதால் பாஜகவை ஏளனமாக மக்கள் பார்க்கின்றனர். தூத்துக்குடி தொகுதிக்குத் தகுதியான, நேர்மையான வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. மத்தியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர். கடந்த 2 முறை வடநாட்டில் பெற்ற வெற்றியைக் கொண்டே பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போது தென்மாநிலங்களை குறிவைத்து பா.ஜ.க. களமிறங்கி இருக்கிறது.

அதுவும் தமிழகத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காகப் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதில் கொங்கு மண்டலத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தநிலையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்துப் பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா புஷ்பாவுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு வழக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்க்கு தூத்துக்குடி தொகுதி பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா புஷ்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி நிர்வாகிகள் தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சசிகலா புஷ்பா போன்ற குப்பைகளைத் தலையில் தூக்கி கொண்டாடுவதால் பாஜகவை ஏளனமாக மக்கள் பார்க்கின்றனர். தூத்துக்குடி தொகுதிக்குத் தகுதியான, நேர்மையான வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *