
பெரம்பலூர் வெடிகுண்டு சம்பவத்தில் காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சரை வன்மையாக கண்டிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளத்தில் பெரம்பலூர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
இதில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ அச்சமில்லை என்றும் சட்டம் ஒழுங்குச் சந்தி சிரிக்க வைக்கும் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை என்றார்.
காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சரை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்தார்.



