ஈரான் அரசு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எச்சரிக்கை.!

தங்கள் மீது நடத்தப்படும் சிறிய அல்லது பெரிய தாக்குதலுக்கு கடுமையான முறையில் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அரசு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது..

ஈரானில் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில், 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்து அந்நாட்டுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இதையடுத்து, யு.எஸ்.எஸ்., ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கிய போர் கப்பலுடன் கூடிய கடற்படையினர் நோக்கி செல்வதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு ஈரான் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், இம்முறை தங்கள் மீது நடத்தப்படும் சிறிய அல்லது பெரிய தாக்குதலையும் முழுமையான போராகவே கருதப்போவதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, கடுமையான முறையில் தக்க பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *