Advertisements

சென்னையில் பெண்களிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ரயிலில் தப்பிச் செல்ல முயன்ற மற்றொருவனை ஆந்திர மாநிலத்தில் ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரேநாளில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை ஒரு மணி நேரத்தில் வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் காலையில் தனியாகக் கடைக்குச் சென்ற பெண்களிடமும், சாலையில் நடந்து சென்ற பெண்களிடமும் சங்கிலிப் பறிப்பு நடைபெற்றது.
இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர் தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றதுது தொடர்பாகப் புகார்கள் வந்ததும் காவல்துறையினர், அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். இது குறிதுதுச் சென்னை விமான நிலையத்தில் உள்ள காவல்துறையினருக்கும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர். அப்போது விமான நிலையத்துக்கு வந்த வட மாநில இளைஞர்கள் இருவர் மீது காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவர்கள் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டவர்கள் தான் என்பது கண்காணிப்புக் கேமரா காட்சிப் பதிவால் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து சுராஜ், ஜாபர் குலாம் உசைன் ஆகிய அந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய துப்பாக்கி, இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
திருடிய நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது ஜாபர் குலாம் உசைன் காவல்துறையினரைத் துப்பாக்கியால் சுட முயன்றான். இதையடுத்துக் காவல்துறையினர் அவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மூன்றாவது கொள்ளையன் நகைகளுடன் ரயிலில் தப்பிச் செல்வதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து ஆந்திர ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துச் சங்கிலிப் பறிப்புத் திருடர்களில் மூன்றாவது ஆளான சல்மானை ஓங்கோலில் ஆந்திர ரயில்வே போலீசார் கைது செய்து சென்னைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.