Advertisements

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 107 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 99 ரூபாய் 55 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தொடர் விலை உயர்வு நாடு முழுவதும் பணவீக்கம், போக்குவரத்து மற்றும் தினசரி பயணச் செலவுகள் ஆகியவற்றில் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விலை உயர்வால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
Advertisements




