Advertisements

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் தலைநகரமான கீவ் வான்பரப்பில், ரஷ்ய ராணுவம் அதிநவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதல், நான்கு வருடப் போரிலேயே மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாக விளங்குகிறது.
இதில், இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து, ரஷ்ய அதிபர் புதின் பேசிய போது, இந்த ஒரேஷ்னிக் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமாகப் பாயக்கூடியது. இது விண்கல் போல மிக அதிவேகமாகப் பயணிப்பதால், தற்போதைய எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் இதைத்தடுத்து அழிக்க முடியாது என்று தெரிவித்தார்.
Advertisements



