கேரளாவிற்கு கொண்டு செல்லும் கனிம வளங்கள் – மனோ தங்கராஜ் விளக்கம்!

Advertisements
கேரளாவிற்குக் கனிம வளங்களைக் கொண்டு செல்வதைத் தடுக்கக் கூடாது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியதாக முன்னாள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், கேரளாவிற்குக் கனிம வளங்களைக் கொண்டு செல்வதைத் தடுக்கக் கூடாது என்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துக் கூறியதாகத் தெரிவித்தார்.
இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து கட்சினுடையே கருத்தோ தன்னுடைய கருத்தோ அல்ல என்று கூறினார். மேலும், இதுதொடர்பாக கட்சி சார்பில் தாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *