Advertisements

கடையநல்லூரில், கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கடையநல்லூர் குமந்தாபுரம் -சுந்தரேசபுரம் சாலையில், சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தீபக், சக்தி அருணாசலம், சிவா என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தபோது, ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisements
