வான்கடே மைதானத்தில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணி!

Advertisements
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 69 ஆவது போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 69 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 60 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *