நள்ளிரவில் கொழுந்துவிட்டு எரிந்த பள்ளி பேருந்து..!

Advertisements
ஓமலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி தீயை அணைத்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கருப்பூரில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து, தும்பிப்பாடி அரசு பள்ளி அருகில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
ஆனால், பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாகப் பேருந்தில் தீப்பற்றியது என தெரிய வந்தது. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *