Chennai:பள்ளியில் வாயு கசிவு..மயக்கம் அடைந்த 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Advertisements

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாகப் புகார் வெளியாகியுள்ளது.

பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயக்கமடைந்த 3 5மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளியிலிருந்து மாணவர்களை வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்துச் செல்லப் பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அருகே உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்திலிருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *