Happy New Year 2024: மோடி புத்தாண்டு வாழ்த்து!

2024- ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

நமது பாரத பிரதமர் மோடி தன் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல தலைவர்களும் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தில் “2024-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் என வாழ்த்து கூறியுள்ளார்.

புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புத்தாண்டையொட்டி நேற்றிரவு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2024-ஆம் ஆண்டு, ஆங்கில புத்தாண்டு  பிறப்பையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்து பூஜைகள் செய்து சிறப்பித்து புத்தாண்டை வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *