
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்து காயமடைந்த 2 ஊழியர்களில் பெருமாள் என்பவர் உயிரிழந்துள்ளார். சென்னை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஊழியர் பெருமாள் உயிரிழந்துள்ளார். பாய்லர் வெடித்து பலத்த காயமடைந்த மற்றொரு ஊழியர் சரவணனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 2 பேருக்குக் காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.
சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் வெளியே அனுப்பக்கூடிய பாய்லர் திடீர் என்று வெடித்ததால் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரையும் வெளியில் ஓடிவந்துள்ளனர். அங்குப் பணியில் இருந்த இரண்டு ஊழியர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திலிருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகளிலிருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தண்டையார்பேட்டையில் செயல்படும் இந்த நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் தீச்சுற்றிலும் எரிந்து வருகின்றது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். அங்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஊழியர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்தச் சம்பவம்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்து காயமடைந்த 2 ஊழியர்களைப் பெருமாள் என்பவர் உயிரிழந்துள்ளார். சென்னை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஊழியர் பெருமாள் உயிரிழந்துள்ளார். பாய்லர் வெடித்து பலத்த காயமடைந்த மற்றொரு ஊழியர் சரவணனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

