Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 01.01.2024

Advertisements
மேஷம்

 

வேலையில் கவனம் தேவை, இருப்பினும் அதிகமான ஆற்றல், ஒரு சில நேரங்களில் அவசரமாக முடிவெடுக்க வைக்கும் அல்லது அலட்சியம் காட்ட வைக்கும். வேலை, வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் அலட்சியமாக இருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

ரிஷபம்

செலவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பணிச்சுமை அதிகரிக்கும், கடினமாக உழைக்க வேண்டிய சூழல் உண்டாகும். எனவே உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் மே மாதத்துக்கு ராசியில் குரு பெயர்ச்சி நடக்க இருப்பதால், அதிகமான வேலைப்பளு உடல் நலத்தை தீவிரமாகப் பாதிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே உணவு, உடற்பயிற்சி, தியானம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

 

மிதுனம்

 

முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவைகுடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாட்டு பயணம் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலான விஷயங்கள் சாதகமாக இருந்தால் கூடத் திருமணம் உயர் கல்வி இடமாற்றம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவசரப்படாமல் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும்.

கடகம்

 

பொறுமை அவசியம் தேவை, ஆனால் ஆண்டு முழுவதுமே இதே போல இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டின் பிற்பகுதியில் கடக ராசியினர் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். ஒரு சில மாதங்களுக்கு என்ன நடந்தாலும், பொறுமையாகவும் விட்டுக் கொடுத்துச் செல்வதும் அவசியம்.

 

சிம்மம்

 

பேச்சில் நிதானம் தேவை  இதுவரை இல்லாத அளவுக்கு எல்லா விஷயங்களிலுமே எந்த அளவுக்கு நன்மை நடக்கிறதோ ஓரளவுக்கு எதிர்மறையான விளைவுகளும் படும். திருமணம் ஆனவர்களுக்கு மற்றவர்களால் பிரச்சனை ஏற்படும். பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் கிடைக்கும் ஆனால் நிதி ரீதியாகக் கவனமாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றிலுமே அதிகாரமான பேச்சுச் சிக்கலை ஏற்படுத்தலாம் எனவே பேச்சில் நிதானம் அவசியம்.

கன்னி

 

ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவை, நிறைய பயணங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும். புதிய வாய்ப்புகள் நல்லது புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்தவை சற்று தாமதமாக இருக்கும். எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்  தேவை.

 

துலாம்

 

உறவுகளில் கவனம் தேவை.தடைகள் விலகும்ம். ஆனால், அதே நேரத்தில் உறவுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளில் சிலர் உங்களைத் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளவோ, ஆதிக்கம் செலுத்தவோமுயற்சி செய்வார்கள்.

 

விருச்சிகம்

 

சொத்து, வாகனம் விஷயங்களில் கவனம் தேவைஎந்த அளவுக்குச் சொத்து சேரும், உங்கள் திறமைகள் வெளிப்படும்,  உங்களின் அதீத வேகமும் ஆர்வமும் அதற்கு எதிர்மறையாகப் பலன் தரலாம். சொத்து வாங்கும்போது ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். மேலும், வாகனம் ஓட்டும்போது அவசரப் படக் கூடாது.

 

தனுசு

 

ஆரோக்கியம் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை, ஏகப்பட்ட வாய்ப்புகள் தேடி வரும், எது பல வகைகளில் பலன் அளிக்கிறதோ அதைத் தேர்வு செய்யுங்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

 

மகரம்

 

தீவிர மன அழுத்தம் ஏற்படலாம், கவனம் தேவை, அதிக வேலை, குடும்பத்தில் சில சிக்கல்கள் மற்றும் செலவுகளால், எவ்வளவு முன்னேற்றம் இருந்தாலும், மன அழுத்தம் இருக்கும். மன அழுத்தத்தால் சில உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம்.

கும்பம்

 

முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை, தனிப்பட்ட முறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லும் வகையில் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், இது சம்மந்தப்பட்ட முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை.

 

மீனம்

 

உடல் நலம் மற்றும் பணம் விஷயத்தில் கவனம் தேவைபயணங்கள், வெளிநாட்டு வேலை, உள்ளிட்டவை சாதகமாக இருக்கும். ஆனால், மருத்துவ செலவுகள் அதிகரிக்கக்கூடும். இதனால் உடல் நலம் மற்றும் பணம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *