திருச்செந்தூர் அருகே உள்ள நாசரேத்தில் இன்றைய தினம் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திமுக கட்சியினர் முன்னிலையில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில். தற்போதுள்ள தமிழக முதல்வரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை. தற்போது காவேரி பிரச்சனையில் நான் ஹெலிகாப்டரில் சென்று நேரில் பார்ப்பேன் என்று கூறுகிறான் என்று முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசினார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை அங்கு பிடித்து கட்டி வைத்து விடுவார்கள் என்று தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வகையில் பேசினார்.
தேவையில்லாமல் அந்த மாநிலத்திற்கு சென்று ஒப்பந்தம் போட்டு நமது மாநிலம் கெட்டுப் போய் விடக்கூடாது. காமராஜர் பெயரை சொல்லி கதை விட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்று மீண்டும் முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேசினார். ஏற்கனவே முதல்வர் விஜய் குறித்து விமர்சனம் செய்த போது அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


