
சென்னை:
1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டம் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தத் திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியைத் தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்த கோரும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எனவே அந்த ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்வதாகவும், மாநகராட்சியே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
