
இந்திய நாட்டுக்குக் கொள்கையையும், தந்திரங்களையும், தலைமையையும் தந்த மாநிலம் குஜராத் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இருந்துகொண்டே குஜராத்தின் வதோதராவில் உள்ள கதி சக்தி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொலியில், ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது, இந்திய நாட்டுக்குத் தந்திரங்கள், கொள்கைகள், தலைவர்களைத் தந்த மாநிலம் குஜராத் என்று பெருமிதத்துடன் கூறினார்.
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய தயானந்த் சரஸ்வதி, நாட்டின் பகுதிகளை ஒன்றிணைத்த சர்தார் வல்லப் பாய் பட்டேல், தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைக் குஜராத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அறிவு, பண்பாடு, தொழில்நுட்பம் ஆகியவற்றின் விந்தையான கலவையாக வதோதரா நகரம் விளங்குவதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.



