
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும். பதட்டத்துடன் செயல்படுவீர்கள். துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில், தொண்டைவலி பிரச்சனை ஏற்படலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால் பணியில் தவறுகளும் கால தாமதமும் ஏற்படும். துணையுடன் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். , தேவையற்ற செலவுகள் எற்படும். ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்படலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. மறக்க முடியாத நினைவுகளை அளிக்கும் நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். துணையுடன் கோபமாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். மேலும், கூடுதல் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்கும். பயனுள்ள விஷயங்களுக்குப் பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்குதுடிப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பணிகளைக் குறித்த நேரத்தில் விரைந்து முடிப்பீர்கள். துணையுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நாழி, உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும்.துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால், பணியில் தவறுகள் நேரலாம். பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தேவையற்ற செலவுகளும் காணப்படும். ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்படலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது., நீங்கள் குழப்பனமான மனநிலையில் இருப்பீர்கள். பணியிடத்தில் பணிகளைப் பொறுமையாகக் கையாள வேண்டும். சகஊழியர்களுடன் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களுக்கு உகந்த சூழ்நிலை இருக்கும். திறமையாகப் பணியாற்றிப் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் சேமிப்பு உயரும். உங்கள் உழைப்பிற்கு ஏற்றக் கூடுதல் பணவரவும் சலுககைளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. கடினமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் நற்பலன்கள் கிடைக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. எதிலும் பொறுமையும் கவனமும் அவசியம். பணியிடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். இது உங்களுக்குக் கவலை அளிக்கும். துணையுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. பணியிடத்தில் நற்பலன்களை பெற நம்பிக்கையுடனும் பொறுமையாகவும் பணியாற்ற வேண்டும். துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். பணப்புழக்கம் குறைந்து காணப்படுகிறது. மேலும், பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படலாம்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். மேலும், புதிய வேலைக்கான வாய்ப்பும் கிடைக்கும். துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


