இந்தியா தான் குண்டுவெடிப்புக்கு காரணம் என்று ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு..!

இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை போரைத் தொடரபோவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, பாகிஸ்தான் தலைமையின் அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் உண்மையை நன்கு அறிந்துள்ளது என்றும் பாகிஸ்தானின் கவனத்தைத் திசை திருப்பும் சூழ்ச்சிகளால் யாரும் ஏமாற மாட்டர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *