இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் பலி..!

Advertisements

காசாவில் இஸ்ரேல் நடத்திய மருத்துவனைத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர்.

காசாவில் இஸ்ரேல் தரைவழியாக பீரங்கிகள் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவில் உள்ள அல்-ஷிஃபா மற்றும் அல்-அஹ்லி மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, தெற்கு காசாவின் ரஃபாவில் ஹமாஸ் நடத்திய எதிர் தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழக்கச் செய்தனர். மேலும், இஸ்ரேலிய துறைமுக நகரமான ஈலாட் மீது ஹவுத்திகள் ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஹோட்டல் தீப்பிடித்தது.

இதையடுத்து, மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான ஆலன்பி கிராசிங்கில் ஜோர்டானிய லாரி ஓட்டுநர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய குடிமக்கள் உயிரிழந்தனர். பின்னர், லாரி ஓட்டுநரை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால்  சுட்டு உயிரிழக்கச் செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *