கோவா மாநில அந்தஸ்து தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Advertisements
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் கோவா முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கோவா மாநில அந்தஸ்து தினத்தையொட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், கோவா மக்களுக்குத் தனது சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கோவாவின் துடிப்பான கலாச்சாரம், செழுமையான பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் அன்பான மக்கள் உலகளவில் அறியப்பட்டவர்கள் என்று கூறினார். கோவாவின் முன்னேற்றத்திற்காகவும் அதன் தனித்துவமான அடையாளத்திற்காகவும் அயராது உழைத்த அனைவரையும் நன்றியோடு நினைவுகூருவதற்கான ஒரு நல்வாய்ப்பாக இந்நாள் அமைகிறது என்று தெரிவித்தார்.
கோவா தொடர்ந்து செழித்தோங்கி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்ற வேண்டுவதாகக் கூறினார். மேலும், ஒவ்வொரு கோவா மக்களின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் செழுமைக்காகவும் தான் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *