Advertisements

1998 ஆம் ஆண்டு பொக்ரானில் வெற்றிகரமான சோதனைகளுக்கு வழிவகுத்த நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பை பிரதிபலித்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டு பொக்ரானில் வெற்றிகரமான சோதனைகளுக்கு வழிவகுத்த நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்து, அந்த சோதனை மூலம் இந்தியாவின் அறிவியல் மேன்மையையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது என்று கூறினார்.
தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் தொழில்நுட்பம் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்தார். தொழில்நுட்பம் வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்துத் துறைகளிலும் பங்களிக்கிறது என்றும் கூறினார்.
திறமையாளர்களை மேம்படுத்துவதிலும், சேவை செய்யும் தீர்வுகளை உருவாக்குவதிலும் தங்களது கவனம் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார்.
Advertisements


