
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.
நியூ சண்டிகரில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. இதில், அதிரடியாக விளையாடிய வைபவ் சூரிய வன்ஷி 96 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வென்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 58 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இதன்மூலம், குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


