Advertisements

கோவா கல்வி, தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றிலும் சிறந்து விளங்குவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கோவா மாநில அந்தஸ்து நாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், கோவா மாநில மக்களுக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கோவா தன் செழுமையான கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு மட்டுமின்றி கல்வி, தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றிலும் சிறந்து விளங்குவதாகக் கூறினார்.
புதுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மீதான அர்ப்பணிப்புடன், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் கோவா முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.
Advertisements



