
தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்கமாட்டோம் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
இந்த நிலையில் தி.மு.க. உடனான தொகுதிப்பங்கீடு தொடர்பாகச் செ
டெல்லியில் உள்ள தலைவர்களுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பாகத் தி.மு.க.நிர்வாகிகள் தொலைப்பேசியில் பேசி வருகின்றனர். தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்தச் சலசலப்பும் இல்லை. தொகுதி பங்கீட்டில் வேறுபாடு இருந்தாலும் அனைவரும் இந்தியா கூட்டணியில்தான் இருப்போம்.
வெகுவிரைவில் சுமுகமாகத் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். 40 தொகுதியையும் எங்களுடையதாகக் கருதி, தேர்தல் பணியாற்றுவோம். தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்கமாட்டோம். எனத் தெரிவித்தார்.



