AR Rahman:பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது தவறு… ஏ.ஆர்.ரகுமான் எதிர்ப்பு..!

Advertisements

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாடல் ரீமிக்ஸ் கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் சமீப காலமாகப் பாடல் ரீமீக்ஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பழைய படங்களில் இடம் பெற்ற பாடல்களை ரீமிக்ஸ் செய்து புதிய படங்களை இடம் பெறச் செய்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் ரீமீக்ஸ் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாடல் ரீமிக்ஸ் கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”சில வருடங்களுக்கு முன்பு வந்த பழைய படங்களில் இருக்கும் பாடல்களைக் காப்பி அடித்து ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதைப் பெருமையாகவும் பேசுகிறார்கள். அப்படி பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது மிகவும் தவறு. பாடலை உருவாக்கியவர்களின் அனுமதியை பெறாமல் பாடலை ரீமிக்ஸ் செய்வது சரியல்ல. தற்போது இசையில் ஏ.ஐ தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் வரும் நாட்களில் இது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். இதனால் நிறைய பேர் வேலை இழக்க நேரிடும்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *