Covid cases : இந்தியாவில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை … மக்கள் அச்சம் !

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-தை தாண்டியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுடில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால்  5364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 4724 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேர், கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம்  4 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் 764 பேர்க்கு  புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் 107 பேரும், வங்கத்தில் 58 பேரும்  டில்லியில் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *