Naam Tamilar Katchi:அடுத்து அடுத்து விலகும் முக்கிய நிர்வாகிகள்..காலியாகிறதது சீமான் கூடாரம்?

Advertisements

சென்னை :நாம் தமிழர் கட்சியிலிருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பிலிருந்து சுகுமார் விலகுவதாகத் தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குச் சீமான், இருக்குற வரைக்கும் இருப்பாங்க. திடீர்னு அதிருப்தி வரும்… திருப்தி இருக்குற இடத்துல போய்ச் சேர்ந்துக்கற வேண்டியதுதான். அது ஒரு பெரிய சிக்கல் இல்லை. இது நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் எனச் சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாகப் பூபாலன் கூறி உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *