Gautami: நிலத்தை மீட்டு தரக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஸ்ரீபெரும்புதுாரில், 46 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். தற்போது அந்த இடத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாய். குடும்ப சூழ்நிலை காரணமாக, இந்த நிலத்தை விற்க முடிவு செய்தேன்…

சென்னை: தனக்கு சொந்தமான, 25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை கவுதமி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, கமிஷனர் அலுவலகத்தில் கவுதமி அளித்துள்ள புகார் மனு:தமிழ், தெலுங்கு, மலையாளம் என, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஸ்ரீபெரும்புதுாரில், 46 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். தற்போது அந்த இடத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாய். குடும்ப சூழ்நிலை காரணமாக, இந்த நிலத்தை விற்க முடிவு செய்தேன்.

அவற்றை விற்பனை செய்து தருவதாக, கட்டுமான நிறுவன அதிபர்அழகப்பன் என்பவர், என்னிடம் உறுதி அளித்தார். அதன்படி, நிலத்தை விற்பனை செய்து தர, அவருக்கு அதிகாரம்வழங்கினேன். அதைப் பயன்படுத்தி அழகப்பன், நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

இதுகுறித்து கேட்டபோது, பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுக்கிறார்.எனவே, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *