படப் பூஜையில் கிளாமர் ரெட் ஹாட் உடை!
கிங்ஸ்டன் படத்தின் பூஜையில் ரெட் ஹாட் ஏஞ்சலாக வந்து கலந்துகொண்ட நடிகை திவ்ய பாரதியின் கலக்கலான போட்டோஸ் இணையத்தில் வைரலாகிறது.

கோவையைச் சேர்ந்தவர் திவ்ய பாரதி. மாடலிங் துறையில் ஈடுபாடு கொண்ட இவருக்குப் படிப்படியாகச் சினிமா ஆசையும் வந்தது. இதனால் இன்ஸ்டாகிராமில் விதவிதமாகக் கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி கவனம் ஈர்த்த திவ்ய பாரதிக்கு அதன் மூலம் சினிமா வாய்ப்பும் கிடைத்தது. இவர் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் பேச்சிலர். இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்ய பாரதி.

முதல் படத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து வியப்பில் ஆழ்த்தினார். பேச்சிலர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகை திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கைவசம் மதில்மேல் காதல், ஆசையென இரண்டு படங்கள் உள்ளன. இதில் மதில்மேல் காதல் படத்தை வெயில் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கி உள்ளார். இதில் முகென் ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி.

அதேபோல் ஆசை படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிருக்கும் ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஷ்க் என்கிற ரொமாண்டிக் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதுதவிர வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார் திவ்ய பாரதி.

இந்நிலையில், நடிகை திவ்ய பாரதிக்கு அடுத்ததாகக் கிங்ஸ்டன் என்கிற பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் திவ்ய பாரதி. இவர்கள் இருவரும் ஏற்கனவே பேச்சிலர் படத்தில் ஜோடியாக நடித்துள்ளதால், இப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

கிங்ஸ்டன் ஜிவி பிரகாஷின் 25-வது படமாகும், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் தான் இப்படத்திற்கு பூஜை போட்டுத் தொடங்கி வைத்தார். இந்தப் பூஜைக்காக நடிகை திவ்ய பாரதி ரெட் ஹாட் உடை அணிந்து வந்திருந்தார். அதில் அவர் நடத்தி செம்ம கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
