
Arjun Das : பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி சங்கருடன் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளார். அப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம். கைதி திரைப்படத்தில் “அன்பு” என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வில்லனாக நடித்துத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றவர்தான் அர்ஜுன் தாஸ். உண்மையில் இன்றளவும் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் தான் அர்ஜுன் டாஸை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொண்டு சென்றது என்றால் அது சற்றும் மிகையல்ல.
கடந்த இரண்டு வருடங்களாகவே அர்ஜுன் தாஸ் நடிப்பில் நல்ல பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதுவும் ஒரு ஹீரோவாக “அநீதி”, “ரசவாதி” போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகப் பல திரைப்படங்களில் அர்ஜுன் தாஸ் தோன்றிய நிலையில், தற்பொழுது முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக, காதல் ரசம் ததும்பும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அவர். பிரபல நடிகை அதிதி சங்கர் நடிப்பில், இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் “ஒன்ஸ் மோர்”. தளபதி விஜயின் சூப்பர் ஹிட் பட டைட்டில் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இயல்பாக ஆக்ஷன் கதாபாத்திரமாக இல்லாமல், மெல்லிய காதல் கதை ஒன்றி நடித்திருப்பதாக அவரே ஒரு பதிவில் கூறியுள்ளார்.

