
கம்போடியா நாட்டின் மீது தாய்லாந்து திடீர் வான்வழித் தாக்குதல் இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. பின்னர் கம்போடியப் படைகள் முதலில் ஒரு ட்ரோனை அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தாய்லாந்து இராணுவம் குற்றம்சாட்டியதுடன் தொடர்ந்து கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
பின்னர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து 360 கி.மீ தொலைவிலுள்ள கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே உள்ள தா மோன் தாம் கோவிலுக்கு அருகே இன்று மோதல்கள் தொடங்கின. மேலும் எல்லையில் தாய்லாந்தின் ஆறு F-16 போர் ரக விமானங்களில், ஒரு விமானம் கம்போடியாவை நோக்கிச் சென்று ஒரு இராணுவ இலக்கை அழித்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.
பின்னர் எல்லையிலுள்ள 86 கிராமங்களைச் சேர்ந்த 40,000 தாய்லாந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் திட்டமிட்டபடி இராணுவ இலக்குகளுக்கு எதிராக நாங்கள் வான்வழி சக்தியைப் பயன்படுத்தியுள்ளோம்” என்று தாய்லாந்து இராணுவ துணை செய்தித் தொடர்பாளர் ரிச்சா சுக்சுவானோன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கம்போடியாவின் பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து தனது இரண்டு கோவில் தளங்களிலுள்ள இராணுவ நிலைகளைத் தாக்கியதாக ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கம்போடியா எப்போதும் பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு காணும் நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஆயுதமேந்திய படையுடன் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லையில் கம்போடியப் படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைக்காக F-16 ஜெட் போர் விமானத்தை நிறுத்தியுள்ளதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர் தாய்லாந்திலிருந்து எரிபொருள்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்வதையும் கம்போடியா நிறுத்தியுள்ளது. மேலும் இருதரப்பினரும் எல்லைப் பகுதிகளை மூடியுள்ளனர். பின்னர் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.


