Advertisements

ஒன்றிய பாஜக அரசால் தமிழகத்தில் உள்ள பழநிமலை முருகன் கோவிலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது இதன் எதிரொலியாக விரைவிலேயே தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க காத்திருக்கின்றன . முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி மலை முருகன் கோவில். இங்கிருக்கும் முருகன் சிலை போகர் என்ற சித்தரால் நவபாஷாணம் மூலம் உருவாக்கப்பட்டது . இது போன்ற நவபாஷாண சிலை உலகில் வேறு எங்கும் கிடையாது.
பழனி மலை முருகன் கோவிலுக்கு பின்னால் புராண கால வரலாறு ஒன்று உண்டு . நாரதர் கொண்டு வந்த மிக அரிதான ஞானப்பழத்தை யாருக்கு தருவது என பரமசிவனும் பார்வதியும் குழப்பம் அடைந்த நிலையில் முருகனும் விநாயகரும் அதற்கு போட்டி போட்டனர். அப்பொழுது முருகன் மயில் மீது ஏறி உலகை சுற்றி வந்து அந்த ஞானப் பழத்தை பெற்றுக் கொண்டார் ஞானப்பழத்தை பெற்றுக் கொண்ட கையோடு முருகப் பெருமான் குடியிருப்பது இந்த பழனி மலைதான் என்பது இந்து மத வரலாறு . இங்கு முருகப்பெருமான் தண்டாயுதபாணி என்ற பெயரில் கோவண ஆண்டியாக காட்சி தருகிறார்.
தமிழ்நாடு மட்டுமல்லாது உலக அளவில் பழனி மலை முருகனுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள் . இப்படி பழம் பெருமை வாய்ந்த பழனிமலை முருகன் கோவிலுக்கு இப்போது புதிய ஆபத்து வர தொடங்கி இருக்கிறது. இந்த கோவிலின் சுற்றுப்புற மலைப்பகுதிகளை வெடிவைத்து தகர்க்கப் போகிறார்கள் என்பது தான் அந்த அதிர்ச்சி தரும் செய்தியாகும் . இறைவனும் இயற்கையும் ஒன்று சேர்ந்து தமிழக மண்ணில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கனிம வளங்களை அள்ளித் தந்திருக்கின்றன.
அத்தகைய கனிம வளத்தில் “மாலிப்டினம்” என்பது ஒரு அரிய வகை கனிமம் ஆகும். இந்த கனிமம் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திற்கு உட்பட்ட நெய்க்காரப்பட்டி, கரடி குட்டம், சத்திரப்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களில் காணப்படுகிறது பழனி மலை அடிவாரத்திலும் இந்த கனிமம் காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலையின் பல பகுதிகளிலும் ரவி மங்கலம் ஐவர்மலை இடும்பன் மலை ஆகிய பகுதிகளிலும் மாலிப்டினம் தனிமம் காணப்படுகிறது.
இந்த கனிமம் எந்த காலத்திலும் துருப்பிடிக்காதது மிகுந்த உறுதி தன்மையுடையது. அதிக வெப்பத்தை தாங்க கூடியது பீரங்கி, விமான கூறுகள் ,விமானத்தின் மேற்கூரைகள் துப்பாக்கிகள் போன்றவை தயாரிப்பதற்கு பயன்படுகின்றன இந்த கனிமம் தோண்டி எடுக்கப்படுமானால் அவை அனைத்தும் இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என தெரிகிறது
இந்தியாவின் ஒட்டுமொத்த மாலிப்டினம் கனிமத்தில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் இருப்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள் . பழனி மலை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் அளவுக்கு இந்த மாலிபாடினம் காணப்படுகிறது . இதற்கான முதல் கட்ட ஆய்வு மத்திய பாஜக அரசு மூலம் பல ஆண்டு காலம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் விடும் பணிகள் தொடங்க இருக்கின்றன
இந்த கனிமத்தை எடுப்பதற்கான சுரங்கம் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல மிகவும் பெரிய அளவில் இந்த சுரங்கம் தோண்டப்படும் அதாவது 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த சுரங்கம் தோண்டப்படும் இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக அழியும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சுரங்கம் தோண்டப்படும் பொழுது சுமார் 100 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதிகளை விட்டு அகதிகளாக அகற்றப்படுவார்கள் என்பது மிகுந்த வேதனை செய்தியாகும் . இது தொடர்பாக தொழில்துறை அதிகாரிகள் கூறும் பொழுது மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஏலம் விடுவதற்கான அனைத்து விதிமுறைகளையும் மத்திய புவியியல் மற்றும் கனிமவள அமைச்சகத்தினர் வரையறுத்து உள்ளனர்
மாலிப்டினம் சுரங்கத்தை ஏலம் விடுவதற்கான ஆயத்த பணிகளை தற்பொழுது துவங்கியிருக்கிறோம் என்று தகவல் தெரிவித்துள்ளனர் . இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் பல கிராமத்து மக்கள் புகார் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இந்த நிலையில் திமுக அரசு இதிலா தலையிட்டு ஒன்றிய அரசின் சுரங்கம் தோண்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது
இதில் தமிழக அரசு தலையிடாவிட்டால் நிச்சயமாக ஒன்றிய அரசு மிகப் பெரிய சுரங்கத்தை அமைத்து திண்டுக்கல் மாவட்டத்தை அழித்து விடுவார்கள் எனவே இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . மதுரையில் முருகனுக்கு மாநாடு நடத்தியவர்கள் பழனி மலை முருகனுக்கு வேட்டு வைக்க துடிக்கிறார்கள் இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கிராமத்து மக்கள் போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் . விரைவிலேயே இது தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Advertisements




