Republic of Artsakh: கலைக்கப்படுகிறது

Advertisements

அர்மீனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையில்  தனி நாடாக இயங்கி வருகிறது, நகோர்னா- கராபக் குடியரசு. தற்போது இத்தனி நாட்டின் குடியரசு ரத்து செய்யப்படுவதாக, பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அஜர்பைஜான் படைகள்  அந்தப் பிராந்தியத்தை கைப்பற்றின. ஆனால் சர்வ தேச அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை, இதனால் குடியரசு கலைக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. நகோர்னா- கராபக் அதிபர் சாம்வெல் ஷாராமன்யன், குடியரசு கலைக்கப்படுவதாகக் கையொப்பமிட்டுள்ளார். வரும் ஜனவரி 1-ஆம் தேதி  கலைக்கப்பட வேண்டும் என்று  அரசாணையில்   குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையில் அஜர்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாமென அஞ்சி, அர்மேனிய பழங்குடியினர் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அர்மேனியாவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகோர்னா- கராபக் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. அர்மேனியர் பெரும்பான்மையினர், இருப்பதால், அந்தப் பிராந்தியத்தை உலக நாடுகள் அங்கீகரித்தன.

ஆனால் 1994- ஆம் ஆண்டு போருக்குப் பின், அர்மேனியப் படையின் ஆதரவுடன் பிரிவினை வாதிகள் பிரந்தியத்தைக்  தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால்  தொடங்கிய மோதல், பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது.கடந்த 19-ஆம் தேதி அஜர்பைஜான் அதிரடி தாக்குதல்  நடத்தியது. மேலும் மொத்த பிராந்தியமும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அறிவித்தது.இந்த இக்கட்டான சுழலில் தான்  நகோர்னா- கராபக் அதிபர் சாம்வெல் ஷாராமன்யன், குடியரசு கலைக்கப்படுவதாகக் கையொப்பமிட்டு அரசாணை பிறப்பித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *