பாகிஸ்தானை கிழித்தெடுத்த முன்னாள் இந்திய வீரர்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் 5வது போட்டியில் மோதின. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்றது, இதில் இந்திய அணி மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் வீரர் விராட் கோலி சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்திய அணி இதுவரை நடைபெற்ற இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மறுபுறம், பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சூழலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாகிஸ்தானின் தோல்விகுறித்து கடுமையான கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “ஆம், என் அணியை நினைத்து நான் பெருமை அடைகிறேன். ஆனால் இன்று நான் மகிழ்ச்சியடையவில்லை. யாராக இருந்தாலும் நல்லது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *