
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த நிலையில் உள்ளது. நேற்று தங்கத்தின் விலை சற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,055-க்கும், ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,075-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


