
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காப்பரவு என்னும் இடத்தில் நல்லூரைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. இங்கு வந்த யானைகள் வாழைகளை முறித்தும் சாய்த்தும் தின்று சேதப்படுத்தி உள்ளன.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயி செந்தூர்பாண்டியன் குற்றம் சாட்டினார்.
காட்டு விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
