
தஞ்சாவூரில் வெண்ணாற்றில் அடித்து செல்லப்பட்ட 17 வயது இளைஞரின் உடல் “ட்ரோன்” உதவியால் மீட்கப்பட்டது
தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவன் முகமது சமீர் திருச்சி ஜோசப் கல்லூரியில் பொறியியல் படிப்புக்காகச் சேர்ந்து 3 நாட்களே ஆகியிருந்தது.
இந்நிலையில் இவர் வெண்ணாற்றில் பெருக்கெடுத்துப் பாயும் நீரைப் பார்த்ததும் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.
தண்ணீரின் வேகம் அதிகம் இருந்ததால் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த முகமது சமீர் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதையடுத்து தஞ்சையில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான யாழி ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் கட்டணம் ஏதும் இல்லாமல் தேடுதல் பணிக்காக டிரோன் கொடுத்தது.
தீயணைப்பு வீரர்கள் டிரோன் உதவியுடன் 5 மணி நேரத்துக்கு மேல் ஆற்றுப் பகுதியில் தேடினர். ஓரிடத்தில் முகமது சமீரின் உடலைக் கண்டுபிடித்தனர். தீயணைப்பு வீரர்களின் உடலை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
