
சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களில், ஒவ்வொரு கட்சியும், சாதி, பணம், செல்வாக்கு என எதன் அடிப்படை யில் தங்களது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன என்பது தொடங்கி, அவர்கள் தேர்தலில் வென்று துறைகள் ஒதுக்கப்பட்ட பின்னர், அந்தத் துறைகளில் வருமான வாய்ப்பு எப்படி என்பது வரை இங்கு அனைத்தும் பேசப்படுகிறது. ஆனால், அந்த எம்.எல.ஏக்களின் சம்பளம் என்ன என்பது பற்றி பெரிதாகத் தெரிவதில்லை.
அடப்போங்க உழைச்சு ஓடா தேயுற நம்மளை மாதிரி, சம்பளம் மட்டும்தானா அவங்களுக்கு வருமானம். ஊழல், லஞ்சம்னு எல்லா பக்கமும் வேட்டைதான் என்று சிலர் சொல்வது கேட்கிறதுதான். என்றாலும், நம் வரிப்பணத்தில் இருந்து அவர்களுக்குச் செல்லும் சம்பளம் பற்றி அறிந்துகொள்வது நம் உரிமையல்லவா நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு ஊதியமும் ஓய்வூதியமும் பெறுகின்றனர் எனப் பார்ப்போமா?!
ரூம் நாட்டை பொறுத்தவரை, எல்லா மாநில எம்.எல்.ஏ-க்களும் சரிசமமான ஊதியம் பெறுவதில்லை. அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சி நிலை, அவற்றின் பொருளாதார சூழல், எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை எனப் பல காரணிகளுக்கு உட்பட்டு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். உதாரணமாக, மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரும் ஏறக்குறைய ரூபாய் ஒரு. லட்சத்து 82ஆயிரம் அடிப்படை சம்பளம் பெறுகிறார்கள்.
ஆனால், பஞ்சாப்பைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவோ தனது அடிப்படை ஊதியமாக வெறும் ரூபாய்.25 ஆயிரம் மட்டுமே பெறுகிறார்.இந்த ஒப்பீட்டை வைத்தே எந்த அளவிலான வேறுபாடுகள் வெவ்வேறு மாநில எம்.எல்.ஏ-க்களின் ஊதியங்களுக்கு இடையே நிலவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். குஜராத்தில் 78,800 ரூபாய், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 25,000 ரூபாய் என இந்த வேறுபாடு எல்லா மாநிலங்களுக்கு இடையேயும் விரிகிறது.
தமிழகத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் சேர்த்து ரூபாய் .1,50,000 வரை வழங்கப்படுகிறது.மாநிலங்களுக்கு இடையேதான் இந்த வேறுபாடா என்று பார்த்தால், இல்லை. ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்திலும் வேறுபாடு நிலவுகிறது. முதலமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என அந்தந்த எம்.எல்.ஏ-க்கள் வகிக்கும் கூடுதல் பதவியின் அடிப்படையிலும்கூட அவர்களது சம்பளத்தில் வேறு பாடுகள் இருக்கின்றன.
உதாரணமாக, டில்லியில் எம்.எல்.ஏ-க்களின் சம்பளம், அவரவர் வகிக்கும் பதவிக்குத் தகுந்தாற்போல் ரூபாய் .72,000-ல் இருந்து ரூ.1.7 லட்சம் வரை என மாறுபடுகிறது.இவை எல்லாமே அடிப்படை ஊதியம்தான். எப்படி ஓர் அரசு ஊழியர் பல படிகளைப் பெறுகிறாரோ, அதேபோல் அகவிலைப்படி, தொகுதிப்படி, அலுவலகச் செலவுப்படி, தொலைபேசி பயன்பாட்டுக்கான படி, கணிப்பொறி உபயோகிப்பதற்கான படி எனப் பலவும் அளிக்கப்படுகின்றன.
இவை தவிர்த்து தினப்படியும் தரப்படுகிறது. உதாரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் அடிப்படை ஊதியம் ரூ.1,82,000 அது தவிர்த்து, அகவிலைப்படி ரூ.51,000, தினப்படி நாளொன்றுக்கு ரூ.2,000, தொலைபேசிக்கென ரூ.8,000 என மற்ற சலுகைகள் எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சத்தைத் தொடுகிறது. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலை.சரி இப்போது விஜய் முதல்வராக போகிறார். அவர் மாதமாதம் வாங்க போகிற சம்பளம் என்ன தெரியுமா.
தவெக கட்சியைத் துவக்கிய பின், பல்வேறு மேடைகளில் விஜய் பேசும்போது, ‘திரைத் துறையில் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டு விட்டு’ மக்களுக்காக அரசியலுக்கு வந்திருப்பதாகப் பேசி வந்தார். அவர் முதல்வராகப் பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்குக் கிடைக்கப் போகும் ஊதியம், பிற சலுகைகள் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.
விஜய், ஏற்கெனவே தனது கடைசி படம் ஜனநாயகன் என்று அறிவித்திருந்தார். இந்தக் கூற்று உண்மையாக இருக்கும் நிலையில், இனி சினிமா மூலமாக அவருக்கு வருவாய் இருக்காது. இதைத்தான் அவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் பலமுறை பேசியிருக்கிறார். ‘தொழிலின் உச்சத்தை விட்டுவிட்டு வருகிறேன். வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன்’ என்று பரப்புரை நிகழ்ச்சிகளில் விஜய் பேசியிருந்தார்.
அதேபோன்று விஜய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிஐவதற்காக வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்களில் தனது பெயரில் ரூபாய் .404.58 கோடிக்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும், அசையா சொத்துகளின் நடப்பு சந்தை மதிப்பு ரூபாய் .115.13 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெளியில் ரூபாய்.76 கோடிக்கு கடன் கொடுத்து இருப்பதாகவும் விஜய் தனது வேட்பு மனுவில் பதிவு செய்திருந்தார்.
சினிமா மூலம் இவ்வளவு நாள் பணம் ஈட்டி வந்த விஜய் இனி, முதலமைச்சராக சுமார் 2 லட்சத்து 5 ஆயிரம் மட்டுமே மாத வருமானம் பெறுவார் என்றாலும். இந்த பதவிக்கென பல்வேறு சலுகைககள் உள்ளன. தமிழக முதல்வருக்கு படிகள் உள்பட மாதாந்திர ஊதியமாக சுமார் ரூபாய்.2 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்படுவதாக 2024ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசாணை குறிப்பிடுகிறது.
இவை தவிர்த்து அரசு குடியிருப்பு, முதல்வருக்கான குண்டு துளைக்காத சிறப்பு வாகனங்கள், இசட் பிளஸ் பாதுகாப்பு, குடும்ப மருத்துவக் காப்பீடு, தொலைத்தொடர்பு வசதிகள், பயண வசதிகள், வீட்டிலும் அலுவலகத்திலும் பணியாற்றுவதற்கான பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கான ஊதிய செலவுகளை தமிழக அரசே ஏற்கிறது. இவற்றோடு, முதல்வருக்கு தனி ஹெலிகாப்டர் வழங்குவதுடன் விமானப் பயண செலவுகளையும் அரசே செலுத்துகிறது.
தமிழக முதல்வருக்கு கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்படுகிறது. இந்த வீட்டுக்கு வாடகை எதுவும் செலுத்தத் தேவையில்லை. பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர் கட்டணங்களை அரசே செலுத்திவிடும். ஆனால் கடந்த காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் போன்ற முதல்வர்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே தங்கியிருந்துள்ளனர். இருப்பினும் அந்த வீடு, முதல்வரின் இல்லம் என்ற பெயரிலேயே எப்போதும் பராமரிக்கப்படுகிறது.
முதல்வரின் வாகனங்களுக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பெட்ரோல் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. முதல்வருக்கு 3 கார்கள் தரப்படும். ஓட்டுநருக்கான ஊதியத்தை அரசாங்கமே வழங்கும்.
மாநில அரசின் சார்பில் உயர் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், மத்திய அரசின் சார்பில் இசட் பிளஸ் அந்தஸ்துள்ள பாதுகாப்பும் தமிழக முதல்வருக்கு வழங்கப்படும். வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு விமானங்களில் முதல்வர் செல்வதற்கு அரசே கட்டணம் செலுத்தும். அதற்கு படிவங்கள் முறைப்படி நிரப்பி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்தக் கட்டணம், பிற சாதாரண விமானப் பயணிகளைவிட, அதிகமாக இருக்கும் என்றும், அந்தத் தொகையைச் செலுத்திவிட்டு பின்பு அதை அரசிடம் பெற்றுக் கொள்ளலாம்
முதல்வர் பயணம் செய்வதற்குத் தனியாக ஒரு ஹெலிகாப்டர், விமானிகள் குழு ஆகியவற்றுக்கும், அதன் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்கும் அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்கிறது.தனியாருக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டருக்கு தமிழக அரசே மாதாந்திர வாடகை செலுத்துகிறது. அந்த ஹெலிகாப்டரில் 8 பேர் வரை பயணம் செய்ய முடியும். முதல்வர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவக் காப்பீடும் தனியாக உள்ளது.
முதல்வருக்கான தனிப்பட்ட ஊதியம், படித்தொகை, செலவுகள் ஆகியவற்றை தமிழக அரசின் பொதுத்துறைதான் கவனித்துக் கொள்கிறது. பாதுகாப்புக்கு மாநில காவல்துறையினரும், அணிவகுப்பு வாகனத்தில் தனியாக பாதுகாப்புப் படையினரும் காவல்துறையால் நியமிக்கப்படுவார்கள்.தகவல் தொடர்பு வசதிகளுக்கான படி, தொகுதிப்படி, பயணப்படி உள்ளிட்ட பல்வேறு இதர சலுகைகளும் பொதுத்துறையால் முதல்வருக்கு வழங்கப்படுகின்றன என்று விளக்கினார்.
-விஜய் ஒரு படத்தில் நடிக்க ரூபாய் 250 கோடி பெறுவதாக சொல்லப்படுக்கிறது. வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்தால் 500 கோடி கிடைக்கும். அவர் முதல்வராகி மாதம் வாங்கபோகிற சம்பளம் ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம். இதனை ஆண்டுக்கு கணக்கிட்டால் 24 லட்சத்து 60 ஆயிரம்தான் கிடைக்கும்.




