போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர் கவலைக்கிடம்!

Advertisements

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சியின் காரணமாகக் கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க திட்டமிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நுரையீரலில் நிமோனியா பாதிப்பு காரணமாகச் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டு வரும் போப் பிரான்சிஸ்-க்கு சிறுநீரக பாதிப்பு உருவாகத் தொடங்கியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *