ஆர்.பி.சவுத்ரியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்.!

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

அதில், ஆர்.பி. சௌத்ரியின் மறைவுச் செய்தி அறிந்ததும், கலைத்துறையின் அமுதசுரபி உடைந்துவிட்டதே என்று உடைந்து போனதாகத் தெரிவித்தார்.

அவர் சாலை விபத்தில் மறைந்ததில் தன் விலா எலும்பு வலிக்கிறது என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் கலைத்துறைக்கும் கலங்கிய கண்களோடு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *