திமுகவை கவிழ்த்த அந்த “சென்டிமென்ட்” – அதிரவைக்கும் ஓசூர் ரகசியம்..!

Advertisements
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஓசூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தால் தோல்வி ஏற்படும் என்ற ஒரு அரசியல் ஆரூடம் நீண்ட காலமாகவே இருக்கு. இந்த அரசியல் சென்டிமென்ட் காரணமாக தான்  திமுகவும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் தோல்வி அடைந்ததாக  பேச்சு அடிபடுது.
இதனால், பல அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் காலங்களில் ஓசூரில் பிரசாரம் செய்வதைத் தவிர்ப்பதை வழக்கமா வைச்சிருக்காங்க.. 2026 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் ஓசூரை தவிர்த்துவிட்டு, கிருஷ்ணகிரி பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்தார்கள்.

அதேபோல், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூட ஓசூரை தவிர்த்துவிட்டு, தளி, வேப்பனஹள்ளி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இதற்கிடையில், இந்த முறை தேர்தல் பிரசாரம் செய்ய வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலில் சூளகிரி அருகே காமன் தொட்டியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால் திடீரென கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டு ஓசூர் அந்திவாடி யில் பிரச்சாரம் மேற்கொண்டது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இப்ப தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக ஆட்சிக் கட்டிலை இழந்தது, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்தது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஓசூரில் அவர் பிரச்சாரம் செய்ததுதான் காரணம்  என்ற கருத்து கட்சியினரிடத்திலும் அந்தப் பகுதி மக்களிடத்திலும் பரவலாக பேசப்படுகிறது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சொல்வது என்னவென்றால்…  ஓசூரில் எல்.கே. அத்வானி மற்றும் ராஜீவ்காந்தி போன்ற தலைவர்கள் பலர் பிரச்சாரம் செய்தவுடன்,  அவர்கள் அரசியல் பயணம் பாதிக்கப்பட்டதாக சொல்றாங்க….

இப்படி பல சம்பவங்களை எடுத்துக்காட்டுடன் சென்டிமென்ட்’க்கு ஆதரவாக பேசுறாங்க.. இதேபோல்தான் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலிலும், ஸ்டாலின்  ஓசூரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டார்.  ஆனால், கடைசி நேரத்தில் அதை மாற்றி சூளகிரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

அதே தேர்தலில் ஓசூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதை அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுறாங்க..இதனால், ஓசூர் ‘அரசியல் சென்டிமென்ட்’ தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கு. இது ஒரு வதந்தி என கருதப்பட்டாலும், அதன் தாக்கம் அரசியல் வட்டாரங்களில் விவாத பொருளாக உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன் தஞ்சையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்  ஸ்டாலின்  பார்வையில் பெரிய கோவில் கோபுரம் தெரியக்கூடாது என்பதற்காக திரை போடப்பட்ட சம்பவம் பெரும் பேசு பொருளானது.அதைத் தொடர்ந்து இப்போது ஓசூர் சென்டிமென்ட்டும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கடைசி வரை போராடிய பெரியாரின் திராவிட இயக்கக் கொள்கைகளை பின்பற்றி வரும் திமுகவும், அதிமுகவும் இதை நம்புவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. ஆனால், நம்ம தரப்பில் விசாரிச்சு பார்த்த அளவில் அது வதந்தி என்று திமுக வட்டாரங்கள் சொல்கின்றன…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *