புதிய தலாய்லாமா யார்? சீனாவில் கடும் பரபரப்பு ..!

Advertisements
தற்போதுள்ள தலாய்லாமா வருகிற ஆறாம் தேதி தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்த நிலையில் அடுத்த தலாய்லாமா யார் என்ற மிகப்பெரிய பரபரப்பு சீனாவை அதிர வைக்கும் படியாக இருக்கிறது . சீனாவில் வாழும் புத்த மதத்தைச் சேர்ந்த திபத்தியர்களின் கடவுளாக கருதப்படுபவர் சென் ரெசிக். புத்த மதம் என்பது 2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மதமாகும்
புத்த மதத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் நம்பக் கூடியவர் தலாய்லாமா. இவர் கடவுளின் மனிதப் பிறவி என்கிறார்கள் அவர்கள்.
தலாய்லாமா என்பவர் மறு பிறவியின் அடிப்படையில் பிறப்பவர் அதாவது ஒரே ஒரு ஆன்மா தான் திரும்பத் திரும்பப் பிறந்து இன்று வரை தலாய்லாமாவாக பதவியேற்க முடிகிறது . புதிதாக ஒரு தலாய்லாமாவை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் அரிதானது இதற்கு நான்கு ஆண்டுகள் 5 ஆண்டுகள் கூட ஆகலாம். காரணம் தலாய்லாமா என்பவர் மறு பிறவி எடுத்து வருபவர் என்று நம்பப்படுவது தான்
அதாவது தற்போது உள்ள தலாய்லாமா மரணம் அடையும் பொழுது அவரது ஆவி எந்த திசையில் செல்கிறது என்பதை கண்டுபிடித்து அந்த திசையில் அதே நிமிடத்தில் யார் பிறந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பார்கள் அவர்தான் அடுத்த தலாய்லாமா . சில சமயம் தலாய்லாமாவுக்கு கீழாக பணியாற்றும் துறவிகளில் ஒருவரது கனவில் தலாய்லாமாவின் மறு பிறவி ஆக வரக்கூடிய சிறுவனை பற்றிய தகவல்களும் தெரிய வரலாம் என்கிறார்கள்
அப்படி ஒரு குழந்தையை கண்டுபிடித்த பிறகு.. அவன் சிறுவனாக வளர்த்து ஆளாக்கப்படுவான் அவனிடம் ஏற்கனவே இருந்த தலாய்லாமாவுக்கு சொந்தமான சில பொருட்களை காட்டுவார்கள் அதனை அவன் அடையாளம் கண்டால் அவன் தான் அடுத்த தராயில்லாமா என்பது உறுதி செய்யப்படும். அப்படிப்பட்ட குழந்தையை கண்டுபிடித்து வளர்த்து ஆளாக்கி வயது வரும் பொழுது அவரை தலாய்லாமா பதவி தந்து கௌரவிப்பார்கள் இது மிகவும் அரிதான பதவி ஆகும்
தற்போதைய தலாய்லாமா 1935 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி வட கிழக்கு திபெத்தில் உள்ள ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் . அவருக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டு அவர் 13வது தலாய்லாமாவின் மறு பிறவியாக அங்கீகரிக்கப்பட்டார் . அதாவது தலாய்லாமாவின் அதே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்பது திபத்தியர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
முதல் முதலாக 1391 ஆம் ஆண்டு தலாய்லாமா கண்டுபிடிக்கப்பட்டார் அவரது பெயர் கெதுன் ட்ரூப். இதுவரை மொத்தம் 14 தலாய்லாமாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் . இத்தகைய தலாய்லாமாக்களுக்கும் அதாவது திபத்தியர்களுக்கும் சீன ஆட்சியாளர்களுக்கும் இடையே எப்பொழுதும் மோதல் போக்கு தான் நடைபெறும் என்பது முக்கிய செய்தியாகும் . தற்போதுள்ள தலாய்லாமாவுக்கு 90 வயதாகிறது வருகிற ஜூலை 6ஆம் தேதி அவர் தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இந்த நிலையில் தற்போதைய தலாய்லாமா ஒரு தகவலை கூறியுள்ளார்
அதாவது இந்த மாதம் தனது வாரிசு குறித்து தெளிவுபடுத்தப் போவதாக அவர் கூறியிருக்கிறார் . அவரது இந்த கூற்று திபத்திய மக்களிடம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . அப்படியென்றால் இந்த மாதம் தலாய்லாமாவின் மரணம் நிகழுமா? அவரது ஆவி மறுபிறவியாக எங்கு பிறப்பெடுக்கப்போகிறது என்றெல்லாம் சீனா முழுவதும் பரபரப்பாக பேசுகிறார்கள்.
இதற்கிடையே தலாய்லாமாவின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு சீன அரசு தடை போடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதனால் சீனா முழுவதும் இப்பொழுது ஒருவித பரபரப்பு தொற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *