
வேர் மூலம் செலுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது வேளாண் துறை அதிகாரிகள் தகவல் .!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை மரங்களைதாக்கியுள்ள வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நோயினை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என தென்னை விவசாயிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தென்னை மரங்களை தாக்கியுள்ள இந்த நோயை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,வேளாண் விஞ்ஞானிகள்,தென்னை வளர்ச்சி வாரியம்,பூச்சியல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் பொள்ளாச்சி அருகே உள்ள சிஞ்சுவாடி கிராமத்தில் உள்ள தோட்டங்களில் தமிழ்நாடு வேளாண் துறை அதிகாரிகள் வெள்ளை ஈ குறித்தவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் வேளாண் விஞ்ஞானிகள், பயிர் பாதுகாப்பு, பூச்சியில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.அப்போது மஞ்சள் ஒட்டு பொறிகட்டுவது, விளக்குப்பொறி வைப்பது, இறை விழுங்கிப் பூச்சிகளை பரவ விடுவது, தென்னை மரங்களின் மேல் பகுதியில் வேளாண் பரிந்துரைத்த மருந்துகளை தெளிப்பது போன்ற செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதுவரை பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே உபயோகப்படுத்த முடியும் இதுவரை இந்த நோயை கட்டுப்படுத்து மத்திய அரசால் பரிந்துறைக்கப்பட் மருந்துகள் இல்லை ஒருங்கிணைந்த இயற்கை வழியிலான முறைகளை மட்டுமே பின்பற்ற முடியும் . கேரளாவில் பாதிப்புகள் குறைவாக இருப்பதற்கு அங்குள்ள சீதோசன நிலை வேறு, மேலும் கேரளாவில் பூச்சிகொல்லி மருந்துகள் உபயோகப்படுத்துபவர்களின் சதவீதம் குறைவு. இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இயற்கையாக எதிரிகளை
பயன்படுத்துவதன் மூலம் வெள்ளை ஈக்கள் எண்ணிக்கை குறையும் ஊடு பயிர்கள் மூலம் தென்னை மரங்களில் இருந்து வெள்ளை ஈக்களை அழிக்கின்ற ஒட்டுண்ணிகளை பார்க்க முடிகிறது .
இயற்கையாகவே உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது பூச்சிகொல்லி மருந்து உபயோகப்படுத்தும் பட்சத்தில் இதுவும் ஒரு பூச்சி தான் அதனுடன் சேர்ந்து இயற்கையாக உற்படுத்தியாகும் பூச்சிகள் இறந்து விட்டால் இந்நோயை கட்டுப்படுத்த கூடிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் . ஊடு பயிர் மேற்கொள்வது தான் மூலமாக வெள்ளை ஈக்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளது முழுமையாக நோயை கட்டுப்படுத்த பூச்சியில் துறையில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. வெள்ளை பூச்சிகளை அழிக்கக்கூடிய அசடிரேக்டின் என்ற வேப்பம் பொருள் மூலம் மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வேர் மூலமாக மருந்து செலுத்தி தென்னை மரத்தின் உச்சிக்கு சென்று பூச்சியை கட்டுப்படுத்தும் வகையின் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது முடிவுகள் வந்தவுடன் விரைவில் அறிவிக்கப்படும்.



