பஞ்சாப், இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப் பாதிப்பு குறித்து நாளை ஆய்வு ..!

Advertisements

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் நடந்த கடும் வெள்ளப் பாதிப்பு குறித்து நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலத்தில் பரவலாகப் பருவமழைப் பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் ஓடக் கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடுகின்ற நிலையில், மாநிலத்தின் தாழ்வானப் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன.

இந்த தொடர் மழை, வெள்ளப்பெருக்கால் 46 பேர் உயிரிழந்த நிலையில், 1.75 இலட்சம் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதனைப் பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் சுனில் ஜாக்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிரதமர் மோடி இமாசல பிரதேசத்திற்கும் நேரில் சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்டப் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *