உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 22 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டியது. இந்த நிலையில் லக்னோ, பிரோசாபாத், சித்தார்த்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தன.
இந்நிலையில், பீகாரின் பல மாவட்டங்களில், இடி, மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையாலும் 25 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளந்தாவில் 18 பேரும், சிவானில் 2 பேரும், கதிஹார், தர்பங்கா, பெகுசராய், பாகல்பூர் மற்றும் ஜெகனாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதீஷ் குமார், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.மார், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *