Advertisements

தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளம் துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றுவதற்காக காலி கண்டெய்னர் பாக்ஸ் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசி மாவட்டம் புளியரை எஸ் வளைவு பகுதியை கடக்க முற்பட்ட பொழுது ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக கனிம வளம் ஏற்றுக் கொண்டு கேரளாவுக்கு சென்ற லாரி ஒன்று எஸ் வளைவு பகுதியில் பழுதாகி நின்ற பகுதியில் கண்டெயினர் ஏற்றி சென்ற லாரி மிகவும் சிரமத்தோடு வளைவில் திரும்பிய பொழுது லாரியில் இருந்த கண்டெய்னர் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது.இதில் யாரும் சிக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனங்களும் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது இன்று 11ஆம் தேதி பங்குனி உத்திர திருநாள் என்பதால் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களிலும் பேருந்துகளிலும் வந்த நிலையில் நடுவழியில் சிக்கிக் கொண்டதால் பரிதவிப்புக்கு உள்ளாயினர்.
இரவு 1மணி வரை கண்டெய்னர் பெட்டி மற்றும் லாரியை அகற்றப்பட முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் கிரேன்கள் கொண்டுவரப்பட்டு கண்டெய்னர் பெட்டி மற்றும் லாரியைஅகற்றும் பணி தொடங்கியது இருப்பினும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது. எஸ் வளைவு பகுதியில் இருந்து கேசவபுரம் வரை லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன இதே போன்று கோட்டை வாசலில் இருந்து தென்மலை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன பல கிலோமீட்டர் தூரம் லாரிகள் அணிவகுத்து நின்றதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Advertisements
