ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் – இந்திய வீராங்கனை தங்க பதக்கம்..!

காது கேளாதோர் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனைப் பிராஞ்சலி பிராஷந்த் துமால் தங்கம் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில், துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பிராஞ்சலி பிராஷந்த் துமால் சிறப்பாக விளையாடி 34 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதைத்தொடர்ந்து, உக்ரைன் வீராங்கனை மொசினா ஹலினா 32 புள்ளிகுகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜியோன் ஜிவோன் 30 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *